பாடசாலையின் நற்பெயருக்கு அபகீர்த்தி விளைவிக்காதே…! யாழில் வெடித்தது போராட்டம்…!
5 view
யாழ் .வடமராட்சி இந்து ஆரம்ப பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள், பழைய மாணவர்கள் இணைந்து இன்றையதினம்(10) காலை கவனயீர்ப்பு போராட்டமொன்றினை முன்னெடுத்தனர். முறையற்ற அல்லது சட்ட விரோதமாக பாடசாலையால் நிதி சேகரிக்கப்படுவதாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், அதன் உண்மை தன்மையை வெளிப்படுத்துவதற்காகவும், பாடசாலையின் நற் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் முன்னாள் பழைய மாணவர் சங்க நிர்வாகிக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க கோரியும், அதே பாடசாலையின் பணியாற்றும் அவரது மனைவியான ஆசிரியைக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரியுமே இன்று இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. பாடசாலையில் வாயிலில் இருந்து ஆரம்பமான குறித்த கவனயீர்ப்பு போராட்டம், வடமராட்சி வலய கல்வி அலுவலகம் வரை சென்று வலய கல்வி பணிப்பாளரிடம் மகஜர் கையளிக்கப்பட்டு போராட்டம் நிறைவடைந்தது. குறித்த மகஜரை பெற்றுக்கொண்ட வடமராட்சி வலய கல்விப் பணிப்பாளர் கனகசபை சத்தியபாலன், இது தொடர்பில், தான் உடனடியாக விசாரணைகளை மேற்கொண்டு உரிய நடவடிக்கைகளை எடுப்பதாக தெரிவித்த நிலையில் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. இதேவேளை, பாடசாலைக்கு சென்ற மாணவர்கள் வகுப்புக்களை…
The post பாடசாலையின் நற்பெயருக்கு அபகீர்த்தி விளைவிக்காதே…! யாழில் வெடித்தது போராட்டம்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பாடசாலையின் நற்பெயருக்கு அபகீர்த்தி விளைவிக்காதே…! யாழில் வெடித்தது போராட்டம்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
