மன்னாரில் இடம்பெற்ற நோன்பு பெருநாள் தொழுகை…! ஏராளமானோர் பங்கேற்பு…!
5 view
புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள், திடல் தொழுகையும் குத்பா பிரசங்கமும் மன்னார் சயீட் சிட்டி பொது மைதானத்தில் இன்று(10) காலை இடம்பெற்றது. ஆண்கள் மற்றும் பெண்களுக்கு ஒரே நேரத்தில் நோன்புப் பெருநாள் திடல் தொழுகையும் குத்பா பிரசங்கமும் இடம்பெற்றது. மன்னார் சயீட் சிட்டி பிரதம இமாம் எச்.என்.எம்.எம்.எஹியாகான் நோன்புப் பெருநாள் தொழுகை நடத்தி பிரசங்கமும் நிகழ்த்தினார். இதனை தொடர்ந்து ஏற்கனவே நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது. இதேவேளை, மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் பெருநாள் தொழுகைகள் இடம்பெற்றன. மேற்படி பகுதிகளில் இடம்பெற்ற பெருநாள் தொழுகைகளில் பல நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
The post மன்னாரில் இடம்பெற்ற நோன்பு பெருநாள் தொழுகை…! ஏராளமானோர் பங்கேற்பு…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மன்னாரில் இடம்பெற்ற நோன்பு பெருநாள் தொழுகை…! ஏராளமானோர் பங்கேற்பு…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
