அம்பாறை மாவட்ட நோன்பு பெருநாள் தொழுகை
16 view
புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் தொழுகையும் குத்பா பிரசங்கமும் அம்பாறை மாவட்டம் மருதமுனை கடற்கரை திறந்த வெளியில் இன்று நடைபெற்றது. இதன் போது மருதமுனை தாறுல் ஹதா மகளிர் இஸ்லாமிய அரபுக் கல்லூரியின் பணிப்பாளர் கலாநிதி எம்.எல்.எம்.முபாறக் மதனி தொழுகை நடாத்தி பிரசங்கமும் நிகழ்த்தினார். இதில் ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர். இதே வேளை அம்பாறை மாவட்டத்தின் நற்பிட்டிமுனை ,கல்முனை, சம்மாந்துறை ,நிந்தவூர், அக்கரைப்பற்று, பொத்துவில், உள்ளிட்ட முஸ்லீம் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளிலும் பெருநாள் தொழுகைகள் பரவலாக இடம்பெற்றன. மேற்படி பகுதிகளில் இடம்பெற்ற பெருநாள் தொழுகைகளில் பல்லாயிரக்கணக்காகன மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.
The post அம்பாறை மாவட்ட நோன்பு பெருநாள் தொழுகை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அம்பாறை மாவட்ட நோன்பு பெருநாள் தொழுகை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
