கச்சதீவு கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் மீது தாக்குதல்…! இலங்கை கடற்படையினர் நிராகரிப்பு…!

11 view
கச்சதீவு கடற்பரப்பில் இலங்கை கடற்படையினரால் தாங்கள் தாக்கப்பட்டதாக இராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் முன்வைத்த குற்றச்சாட்டை இலங்கை கடற்படையினர் நிராகரித்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கச்சத்தீவுக்கு கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபட்ட தங்களை இலங்கை கடற்படையினர் தாக்கியதாக இராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் நால்வர் இந்திய ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர். மீனவர்கள் தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கடற்படை ஊடகப் பேச்சாளர், கேப்டன் கயான் விக்ரமசூரிய கருத்து தெரிவிக்கையில், குறித்த விடயம் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. அத்துடன், கடற்படையினரால் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் கடற்பகுதி தொடர்பான ரேடார் தகவல்கள் வழங்கப்படுமாயின் அந்த பகுதிக்கு கடற்படையினரின் படகொன்று சென்றதா? என்பதை உறுதிப்படுத்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபடுகின்ற இந்திய கடற்றொழிலாளர்களை மீண்டும் திருப்பி அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அதனை மீறி செயற்படுபவர்களாயின் கைது செய்யப்படுகின்றனர். எவ்வாறாயினும், கடற்றொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தும் அதிகாரம் கடற்படையினருக்கு இல்லை எனவும் கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
The post கச்சதீவு கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் மீது தாக்குதல்…! இலங்கை கடற்படையினர் நிராகரிப்பு…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース