ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் தரப்பில் களமிறங்கும் பொது வேட்பாளர்…! தேவையற்ற செயற்பாடு…! ஈ.பி.டி.பி சுட்டிக்காட்டு…!
5 view
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் தரப்பில் இருந்து பொது வேட்பாளரை நிறுத்தும் சில தமிழ் அரசியல் தரப்பினரது செயற்பாடுகள் தேவையற்ற ஒன்றாக அமைவதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை சிறீரங்கேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம்(09) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டினது சமகால அரசியல் சூழலுக்கேற்ற வகையில் குறித்த ஒரு தரப்பினர் அல்லது தரப்பு வெற்றிபெறும் வேட்பாளராக இருப்பார் என தெரிந்திருந்தும் அதற்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ள ஜனாதிபதி அபேட்சகரையே இன்று வரை தமிழர் தரப்பிலிருந்து ஆதரிக்கப்பட்டுவரும் துர்ப்பாக்கியமான வரலாறு இருந்து வருகின்றது. அதாவது, தமிழ் மக்களுக்கும் வெற்றி பெற்று நாட்டின் ஜனாதிபதியாக தெரிவாகவுள்ளவருக்கும் இடையே புரிந்துணர்வு அற்றவகையில், அல்லது நேரடியாக சென்று தமிழ் மக்களின் தேவைகளை பேரம்பேசி பெற்றுக்கொள்ள இயலாதவகையில் தமது சுயநல அரசியலை மேற்கொண்டுவரும் தமிழ் அரசியல் தரப்பினரால்…
The post ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் தரப்பில் களமிறங்கும் பொது வேட்பாளர்…! தேவையற்ற செயற்பாடு…! ஈ.பி.டி.பி சுட்டிக்காட்டு…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் தரப்பில் களமிறங்கும் பொது வேட்பாளர்…! தேவையற்ற செயற்பாடு…! ஈ.பி.டி.பி சுட்டிக்காட்டு…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
