அரிசியின் விலையைக் குறைக்குமாறு வலியுறுத்தி யாழில் போராட்டம்!
6 view
”அரசாங்கம் உடனடியாக அரிசியின் விலையை குறைக்கவேண்டும்” என வலியுறுத்தி யாழ்ப்பாணம் சாவகச்சேரி பேருந்து நிலையம் முன்பாக இன்று காலை போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. வடக்கு-கிழக்கு பெண்கள் கூட்டு அமைப்பினரால் முன்னெடுக்கப்பட்ட இப்போராட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டு தமது எதிர்ப்பினைத் தெரிவித்திருந்தனர். இதன்போது போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் ‘அரிசியின் விலையேற்றத்தால் பசியில் வாடுகிறோம், வளச் சுரண்டல்களை நிறுத்து, பொருளாதார சுமையைக் குறை, ஏழையின் வயிற்றில் அடிக்காதே, பட்டினிச் சாவு வேண்டாம், பிள்ளைகளை பசியால் வாட்டாதே போன்ற சுலோகங்களை ஏந்தியவாறு தமது எதிர்ப்பினைத் தெரிவித்திருந்தனர்.
The post அரிசியின் விலையைக் குறைக்குமாறு வலியுறுத்தி யாழில் போராட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அரிசியின் விலையைக் குறைக்குமாறு வலியுறுத்தி யாழில் போராட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
