விபத்தில் சிக்கி 22 வயது இளைஞன் மரணம்..! – பிழைப்புக்காக மன்னாருக்கு வந்த நிலையில் சோகம்

30 view
  மன்னார் –  தாழ்வுபாடு பிரதான வீதி ரெலிக்கோம் சந்திக்கு அருகாமையில்  இடம்பெற்ற விபத்தில் 22 வயதுடைய இளைஞன் பரிதாபமாக மரணமடைந்துள்ளார்.  நேற்று மாலை இடம்பெற்ற குறித்த விபத்தில் குடும்ப வறுமை காரணமாக மன்னாரில் உணவகத்தில் பணியாற்றிவந்த  இளைஞனே  இவ்வாறு உயிரிழந்துள்ளார். ஹட்டன் பகுதியை சேர்ந்த  22 வயதுடைய சந்திரகுமார் எனும் இளைஞனே விபத்தில் உயிரிழந்தவராவார். இவர் கடந்த 6 வருடங்களுக்கு மேலாக மன்னார் மாவட்டத்தில்  உணவகங்களில் தொழிலாளராக பணி புரிந்து வந்த நிலையில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்து இடம்பெற்று சிகிச்சைக்காக மன்னார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையிலேயே இளைஞன் உயிரிழந்துள்ளார்.  விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்  
The post விபத்தில் சிக்கி 22 வயது இளைஞன் மரணம்..! – பிழைப்புக்காக மன்னாருக்கு வந்த நிலையில் சோகம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース