பல இலட்சம் பெறுமதியான பொருட்களுடன் கட்டுநாயக்கவில் இரு வர்த்தகர்கள் கைது..!
43 view
நாட்டிற்குள் சுங்க வரி செலுத்தாமல் சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட 50 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களுடன் இரு வர்த்தகர்கள் கட்டுநாயக்க விமான நிலைய குற்றப்புலனாய்வு பிரிவினரால் இன்று (8) கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை கைதுசெய்யப்பட்டவர்கள் ஜா – எல, இரத்தினபுரி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 58 மற்றும் 50 வயதுடையவர்களாவர். குறித்த நபர்கள் இருவரும் இன்று (8) அதிகாலை 12 மணியளவில் சிங்கப்பூரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். இந்நிலையில், இந்த இரு வர்த்தகர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அவர்கள் கொண்டுவந்த பயணப் பொதிகளிலிருந்து 56 விஸ்கி மதுபான போத்தல்கள் மற்றும் 12 மடிக்கணனிகள் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன.
The post பல இலட்சம் பெறுமதியான பொருட்களுடன் கட்டுநாயக்கவில் இரு வர்த்தகர்கள் கைது..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பல இலட்சம் பெறுமதியான பொருட்களுடன் கட்டுநாயக்கவில் இரு வர்த்தகர்கள் கைது..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
