கச்சத்தீவு விவகாரத்தை வைத்து தமிழ்நாட்டு மக்களுடைய வாக்குகளை பெறுவதற்கு அரசியல் தரப்பினர் முயற்சி…! சுப்பிரமணியம் தெரிவிப்பு…!
18 view
இந்தியாவில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் கச்சத்தீவு விவகாரத்தை வைத்து தமிழ்நாட்டு மக்களுடைய வாக்குகளை பெறுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் எம்.வி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவிலே தற்போது தேர்தல் சூடு பிடித்துள்ளது. அந்தவகையில் இந்திய தமிழ்நாட்டு மக்களுடைய வாக்கு வங்கியை பலப்படுத்தல், இலங்கையில் இருந்து சீனாவின் உடைய ஆதிக்கத்தை குறைப்பதற்கும் மற்றும் தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் இந்தியாவிற்கு சில தேவைகள் காணப்படுகின்றது. இந்த விடயங்கள் இரண்டையும் மையமாக வைத்துக் கொண்டு இன்றைய தேர்தல் பிரச்சாரத்தில் இந்திய அரசாங்கமானது ஒன்றுமே இல்லாத, எந்த பயன்பாட்டிற்கும் உகந்ததில்லாமல் இருக்கின்ற கச்சதீவு பிரச்சினையை தொடர்ந்து பேசிக்கொண்டு இருக்கின்றார்கள். 50 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற பேச்சுவார்த்தை மற்றும் இணக்கப்பாடு மூலம் கச்சதீவானது இலங்கைக்கு உரியது என்ற வகையில் வழங்கப்பட்டது. தற்போது…
The post கச்சத்தீவு விவகாரத்தை வைத்து தமிழ்நாட்டு மக்களுடைய வாக்குகளை பெறுவதற்கு அரசியல் தரப்பினர் முயற்சி…! சுப்பிரமணியம் தெரிவிப்பு…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கச்சத்தீவு விவகாரத்தை வைத்து தமிழ்நாட்டு மக்களுடைய வாக்குகளை பெறுவதற்கு அரசியல் தரப்பினர் முயற்சி…! சுப்பிரமணியம் தெரிவிப்பு…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
