யாழ். பேராலயத்துக்கு கொண்டு செல்லப்பட்ட மருதமடு அன்னையின் திருச்சொரூபம்
48 view
மருதமடு அன்னையின் திருச்சொரூபம் மன்னாரிலிருந்து வெள்ளாம்குளம் ஊடாக யாழ். பேராலயத்திற்கு இன்று (06) சனிக்கிழமை எடுத்து வரப்பட்டுள்ளது. மருதமடு அன்னையின் முடிசூட்டு விழாவின் 100 ஆவது ஆண்டு யூபிலி விழாவுக்கு ஆயத்தமாக மருத மடு அன்னையின் திருச்சொரூபம் மன்னார் மறைமாவட்டப் பங்குகளுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அதன்படி, யாழ். ஆயரின் வேண்டுகோளுக்கிணங்க யாழ். மறைமாவட்டத்துக்கு மடு அன்னையின் திருச்சொரூபம் எடுத்துச் செல்லப்பட்டது. யாழ். மறைமாவட்டத்துக்கு எடுத்து வரப்பட்ட திருச்சொரூபம் தொடர்ச்சியாக, யாழ்ப்பாணம், தீவகம், இளவாலை, பருத்தித்துறை, கிளிநொச்சி, முல்லைத்தீவு மறைக் கோட்டங்களின் பங்குகளுக்கும் எதிர்வரும் 30ஆம் திகதி வரையில் எடுத்துச்செல்ப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
The post யாழ். பேராலயத்துக்கு கொண்டு செல்லப்பட்ட மருதமடு அன்னையின் திருச்சொரூபம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழ். பேராலயத்துக்கு கொண்டு செல்லப்பட்ட மருதமடு அன்னையின் திருச்சொரூபம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
