சர்வதேச கண்ணிவெடி தினத்தை முன்னிட்டு கிளிநொச்சியில் இடம்பெற்ற விசேட நிகழ்வு…!

12 view
சர்வதேச கண்ணிவெடி தினத்தை முன்னிட்டு கிளிநொச்சி மாவட்டத்தில் விசேட நிகழ்வு இன்று(06)  இடம்பெற்றது. கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்குட்பட்ட கிளி/மத்திய கல்லூரி மைதானத்தில் இன்று(06)காலை 10மணியளவில் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் நிறுவனங்களின் ஏற்பாட்டில் சர்வதேச கண்ணிவெடி தின நிகழ்வு நடாத்தப்பட்டது. குறித்த நிகழ்வில், வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த, வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ், பதில் மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர்கள், மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கண்ணிவெடி அகற்றும் பிரிவினர் காட்சிப்படுத்தியிருந்த வெடிகுண்டுகளையும், பாதுகாப்பு கவசங்களையும் அமைச்சர்கள் பார்வையிட்டதோடு, கண்ணிவெடி அகற்றும் செயன்முறையும் அங்கே காண்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
The post சர்வதேச கண்ணிவெடி தினத்தை முன்னிட்டு கிளிநொச்சியில் இடம்பெற்ற விசேட நிகழ்வு…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース