ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக களமிறங்க தயார்…! சம்பிக்க தெரிவிப்பு…!
52 view
அரசியல் கூட்டணியொன்று எதிர்காலத்தில் மலரவுள்ளது எனவும் அதன்மூலம் பொதுவேட்பாளராக களமிறங்குமாறு கோரிக்கை விடுத்தால் அதனை ஏற்பதற்கு தயார் எனவும் ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார் சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், ஜனாதிபதி தேர்தல்தான் தற்போது நடத்தப்பட வேண்டும். பொதுத்தேர்தலை முதலில் நடத்துவதற்கு எவராவது முற்பட்டால் அது வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு விவகாரத்தால் தாக்கம் செலுத்தும். வெளிநாட்டு கடனை மறுசீரமைப்பை எதிர்வரும் ஜுலை மாதத்துக்குள் செய்தாக வேண்டும். ஜனாதிபதி தேர்தலின் பின்னர் பொதுத்தேர்தலை நடத்தலாம். ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளராக களமிறங்குமாறு எனக்கு இன்னும் கோரிக்கை விடுக்கப்படவில்லை. எதிர்காலத்தில் கூட்டணி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அந்த கூட்டணி கோரிக்கை விடுத்தால் பொதுவேட்பாளராக களமிறங்க தயார் என தெரிவித்துள்ளார்
The post ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக களமிறங்க தயார்…! சம்பிக்க தெரிவிப்பு…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக களமிறங்க தயார்…! சம்பிக்க தெரிவிப்பு…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
