கிளிநொச்சியில் 18 கிலோ கஞ்சா மீட்பு…! சந்தேக நபர் கைது…!
13 view
கிளிநொச்சியில் 18 கிலோ 470 கிராம் கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மன்னாரில் உள்ள போதை ஒழிப்பு விசேட பிரிவினருக்கு கிடைத்த தகவலிற்கு அமைவாக குறித்த பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பில் குறித்த கைது இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னகர் பகுதியில் வைத்தே சோதனை மேற்கொண்ட போது 18 கிலோ 470 கிராம் கஞ்சா குறித்த சந்தேக நபரிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளது. நள்ளிரவில் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரும், சான்று பொருட்களும் கிளிநொச்சி பொலிஸ் காவலில் உள்ள நிலையில் இன்று நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
The post கிளிநொச்சியில் 18 கிலோ கஞ்சா மீட்பு…! சந்தேக நபர் கைது…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கிளிநொச்சியில் 18 கிலோ கஞ்சா மீட்பு…! சந்தேக நபர் கைது…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
