புலத்சிங்கள பகுதியில் இடம்பெற்ற பயங்கரம் – ஒருவர் உயிரிழப்பு..!!
10 view
புலத்சிங்கள ஹல்வத்துர பிரதேசத்தில் சற்று முன்னர் வாகன விபத்து ஏற்பட்டுள்ளது குறித்த விபத்து நேற்று இரவு ஏற்பட்டது. இதிலே ஒருவர் உயிரிழந்ததை தொடர்ந்து அப்பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. ஹல்வத்துர பகுதியைச் சேர்ந்த 68 வயதுடைய ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு 8.30 மணியளவில் புலத்சிங்கள ஹல்வத்துர பகுதியில் இங்கிரியில் இருந்து புலத்சிங்கள நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளில் நபர் ஒருவர் மோதியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்தனர். பொலிசார் தலையிட்டு தீயை கட்டுப்படுத்த முயற்சித்த போதும் அதற்குள் மோட்டார் சைக்கிள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என்பதுடன், மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர் புலத்சிங்கள பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
The post புலத்சிங்கள பகுதியில் இடம்பெற்ற பயங்கரம் – ஒருவர் உயிரிழப்பு..!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புலத்சிங்கள பகுதியில் இடம்பெற்ற பயங்கரம் – ஒருவர் உயிரிழப்பு..!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
