சுமந்திரன் தவிர்ந்த ஏனைய எதிராளிகள் தங்கள் ஆட்சேபனைகளைச் சமர்ப்பிப்பதற்காக தமிழரசுக் கட்சி வழக்கு ஒத்திவைப்பு!
12 view
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிர்வாகத்துக்கு எதிராக அதன் உறுப்பினர் ஒருவர் தாக்கல் செய்த வழக்கில் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. தவிர்ந்த ஏனைய எதிராளிகள் அறுவரும், தங்களின் ஆட்சேபனைகளை எழுத்தில் சமர்ப்பிப்பதற்காக கால அவகாசம் கோரியமையை அடுத்து எதிர்வரும் 24 ஆம் திகதி வரை அவகாசம் வழங்கி அந்தத் திகதிக்கு வழக்கை ஒத்திவைத்தது நீதிமன்றம். திருகோணமலை மாவட்ட நீதிபதி மா.கணேசராஜா முன்னிலையில் இந்த வழக்கு இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, ஏழு எதிராளிகளில் ஒருவரான சுமந்திரன் தமது தரப்பு ஆட்சேபனைச் சமர்ப்பணங்களை எழுத்தில் சமர்ப்பித்தார். ஏனைய எதிராளிகள் தமது ஆட்சேபனை சமர்ப்பணங்களை சமர்ப்பிக்காத நிலையில் தாங்களும் அதனை முன்வைப்பதற்குக் கால அவகாசம் கோரினர். அதற்கு அவகாசம் வழங்கி வழக்கை 24ஆம் திகதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். இந்த வழக்கு இன்று எடுத்துக்கொள்ளப்பட்ட போது எதிராளியான சுமந்திரன் முதல் தடவையாக நீதிமன்றில் முன்னிலையானார். அவர் தமக்காகத் தாமே சமர்ப்பணம் செய்தார். கடந்த 17ஆம் திகதி வவுனியாவில் நடைபெற்ற கட்சியின்…
The post சுமந்திரன் தவிர்ந்த ஏனைய எதிராளிகள் தங்கள் ஆட்சேபனைகளைச் சமர்ப்பிப்பதற்காக தமிழரசுக் கட்சி வழக்கு ஒத்திவைப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சுமந்திரன் தவிர்ந்த ஏனைய எதிராளிகள் தங்கள் ஆட்சேபனைகளைச் சமர்ப்பிப்பதற்காக தமிழரசுக் கட்சி வழக்கு ஒத்திவைப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
