பெருந்தோட்டங்களின் நிர்வாக பிரிவுக்கு தோட்டப்புறங்களில் கல்வி பயின்று புலமை பெற்ற இளைஞர் யுவதிகளுக்கு சந்தர்ப்பம்…! பாரத் அருள்சாமி தெரிவிப்பு…!
52 view
பெருந்தோட்டங்களின் நிர்வாக பிரிவுக்கு தோட்டப்புறங்களில் கல்வி பயின்று புலமை பெற்ற இளைஞர் யுவதிகள் உள்வாங்கப்பட்டுள்ளதாக பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி தெரிவித்துள்ளார். மக்கள் பெருந்தோட்டயாகத்தின் 48ஆம் ஆண்டு விழா கொழும்பில் அமைந்துள்ள தலைமை காரியாலத்தில் நடைபெற்றது. மக்கள் பெருந்தோட்டயாகத்தின் தலைவர் விங் கமாண்டர் புவனக அபேயசூரிய தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி இவ்வாறு தெரிவித்தார். பெருந்தோட்டங்களின் நிர்வாகப் பிரிவிற்கு தோட்டப்புறங்களில் கல்வி பயின்று புலமை பெற்ற இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பினை வழங்க கௌரவ அமைச்சர் ஜீவன் தொண்டமான் பணிப்புரை விடுத்திருந்தார். அதற்கமைய முதல் கட்டமாக ஹந்தான, மவுண்ட்ஜீன், லூல்கந்தூர, ரஹத்துங்கோட, போன்ற தோட்டங்களுக்கு நிர்வாக பிரிவிற்கு இளைஞர், யுவதிகள் இணைத்துக் கொள்ளப்பட்டார்கள். இதன்போது கருத்து தெரிவித்த பாரத் அருள்சாமி ’48 வது ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் மக்கள் பெருந்தோட்டயாகத்திற்கும்,…
The post பெருந்தோட்டங்களின் நிர்வாக பிரிவுக்கு தோட்டப்புறங்களில் கல்வி பயின்று புலமை பெற்ற இளைஞர் யுவதிகளுக்கு சந்தர்ப்பம்…! பாரத் அருள்சாமி தெரிவிப்பு…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பெருந்தோட்டங்களின் நிர்வாக பிரிவுக்கு தோட்டப்புறங்களில் கல்வி பயின்று புலமை பெற்ற இளைஞர் யுவதிகளுக்கு சந்தர்ப்பம்…! பாரத் அருள்சாமி தெரிவிப்பு…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
