நித்திரைக்கு சென்றவர் மயங்கிய நிலையில் உயிரிழப்பு! யாழில் அதிர்ச்சிச் சம்பவம்

24 view
  யாழ்ப்பாணத்தில்  நித்திரைக்குச் சென்ற நபர் ஒருவர் மயக்கமுற்றதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார். 45 வயதுடைய செபமாலை செல்வராசா  என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த  நபர் கடந்த 31ஆம் திகதி இரவு நித்திரைக்குச் சென்ற நிலையில் மறுநாள் காலை 7 மணியானபோதிலும் அவர் நித்திரையில் இருந்து எழவில்லை.  இதையடுத்து அவரை பரிசோதித்துப் பார்த்த உறவினர்கள் மயக்கமுற்ற நிலையில் அவர் இருப்பதை கண்டறிந்து உடனடியாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார்.  இந்த நிலையில்,  நேற்றுக் காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.  இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேம் குமார் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
The post நித்திரைக்கு சென்றவர் மயங்கிய நிலையில் உயிரிழப்பு! யாழில் அதிர்ச்சிச் சம்பவம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース