நாடு முழுவதும் நிறுவப்பட்டுள்ள 'ஸ்பா'க்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு..!
10 view
நாடு முழுவதும் நிறுவப்பட்டுள்ள ‘ஸ்பா’க்களுக்கும் உள்ளூர் மருத்துவ அமைச்சு மற்றும் ஆயுர்வேத துறைக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் ஆயுர்வேத திணைக்களம் ‘ஸ்பா’க்களுக்கு உரிமம் வழங்குவதில்லை எனவும் சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்துள்ளார். ஆயுர்வேதத் துறையில் பதிவுசெய்யப்பட்ட மசாஜ் நிலையங்களை நாங்கள் முறையாக ஒழுங்குபடுத்துகிறோம் என்று இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, பாரம்பரிய வைத்தியர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும், உள்ளுர் மருத்துவ முறையைப் பாதுகாப்பதற்கும் விசேட பிரிவு ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. அதன்படி பாரம்பரிய வைத்தியர்களின் பிரச்சினைகளை அந்தப் பிரிவில் முன்வைக்க முடியும் என்பதை இங்கு குறிப்பிட வேண்டும் என்று சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
The post நாடு முழுவதும் நிறுவப்பட்டுள்ள 'ஸ்பா'க்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாடு முழுவதும் நிறுவப்பட்டுள்ள 'ஸ்பா'க்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
