33 ஆண்டுகள் துன்பங்களை மட்டுமே அனுபவித்த எம்மை, இனிமேலாவது நிம்மதியாக வாழ விடுங்கள் – முருகன் தெரிவிப்பு..!
19 view
33 ஆண்டுகள் துன்பங்களை மட்டுமே அனுபவித்த எம்மை, இனிமேலாவது நிம்மதியாக வாழ விடுங்கள் என விடுதலை பெற்று வந்துள்ள முருகன் குறிப்பிடுட்டுள்ளார். இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சந்தேகநபர்களாக கைதுசெய்யப்பட்டு மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இந்தியாவில் சிறைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் விடுதலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளான முருகன், றொபர்ட்பயஸ், ஜெயக்குமார் ஆகிய மூவரும், தமது மூத்த சட்டத்தரணி புகழேந்தி அவர்களது வழித்துணையுடன் சுமார் 33 ஆண்டுகளுக்குப் பின் நேற்றையதினம் யாழ்ப்பாணத்திலுள்ள தமது பூர்வீக வாழ்விடங்களுக்கு வந்தடைந்துள்ளனர். இவர்களை, குரலற்றவர்களின் குரல் அமைப்பினுடைய ஒருங்கிணைப்பாளர் மு. கோமகன் நேரில் சென்று சந்தித்து, அவர்களது சுகநலன் மற்றும் இதர விடயங்கள் தொடர்பில் கேட்டறிந்துள்ளார். இதன் போது, தாம் திருச்சி சிறப்பு முகாமிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு வானூர்தி வழியாக இலங்கை கட்டுநாயக்கா விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அதே வேளை, தாங்கள் மூவரும் தற்காலிக விசாவிலேயே இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்த காரணத்தைக்…
The post 33 ஆண்டுகள் துன்பங்களை மட்டுமே அனுபவித்த எம்மை, இனிமேலாவது நிம்மதியாக வாழ விடுங்கள் – முருகன் தெரிவிப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 33 ஆண்டுகள் துன்பங்களை மட்டுமே அனுபவித்த எம்மை, இனிமேலாவது நிம்மதியாக வாழ விடுங்கள் – முருகன் தெரிவிப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
