வவுனியாவில் பொலிஸ் மோப்ப நாய்கள் சாகச நிகழ்வு..!!
26 view
வவுனியாவில் பொலிஸ் மோப்ப நாய்களின் சாகச நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. வவுனியா, நகரசபை மைதானத்தில் இன்று இடம்பெற்ற சித்திரை கலை விழா நிகழ்வின் போது குறித்த சாகச நிகழ்வு இடம்பெற்றது. கண்டியில் இருந்து கொண்டு அழைத்து வரப்பட்ட பயிற்றப்பட்ட பொலிஸ் மோப்ப நாய்கள், இராட்டினத்தில் சுற்றுதல், தலையில் நீர் கொண்டு செல்லல், சிறுவர்களை இராட்டினத்தில் ஏற்றி சுற்றுதல், மோட்டர் சைக்கிளில் பயணித்தல், வளையத்தின் ஊடாக பாய்தல், நெருப்பு வளையத்தின் ஊடாக பாய்தல், துப்பாக்கி சூடு நடத்தியரை விரட்டிப் பிடித்தல் போன்ற பல சாகச நிகழ்வுகளை மோப்ப நாய்கள் மேற்கொண்டிருந்தன. மேலும் மோப்ப நாய்களின் சாகசத்தை பார்பதற்காக பலரும் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
The post வவுனியாவில் பொலிஸ் மோப்ப நாய்கள் சாகச நிகழ்வு..!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வவுனியாவில் பொலிஸ் மோப்ப நாய்கள் சாகச நிகழ்வு..!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
