"இழக்கப்படுகின்ற கல்வி உரிமையை வென்றெடுப்பது எப்படி?" எனும் தொனிப்பொருளில் ஆசிரியர் சேவை சங்கத்தின் மாநாடு..!!
10 view
இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் வடமாகாண மாநாடு இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. “இழக்கப்படுகின்ற கல்வி உரிமையை வென்றெடுப்பது எப்படி?” எனும் தொனிப்பொருளில் இன்று பிற்பகல் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் மண்டம் ஒன்றில் இந்த மாநாடு இடம்பெற்றது. குறித்த மாநாட்டில், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க, இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் மகிந்த ஜெயசிங்க, தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க, இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் தேசிய அமைப்பாளர் சுந்தரலிங்கம் பிரதீப், தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகர், அதிபர்கள், ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
The post "இழக்கப்படுகின்ற கல்வி உரிமையை வென்றெடுப்பது எப்படி?" எனும் தொனிப்பொருளில் ஆசிரியர் சேவை சங்கத்தின் மாநாடு..!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post "இழக்கப்படுகின்ற கல்வி உரிமையை வென்றெடுப்பது எப்படி?" எனும் தொனிப்பொருளில் ஆசிரியர் சேவை சங்கத்தின் மாநாடு..!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
