கொங்கிரீட் குழாய் சரிந்து விழுந்து மாணவன் சாவு..! – தமிழ் பாடசாலையொன்றில் நடந்த துயரம்

24 view
மஸ்கெலியா கார்ட்மோர் தமிழ் வித்தியாலயத்தில் கொங்கிரீட் குழாய் ஒன்று சரிந்து விழுந்ததில் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கார்ட்மோர் தோட்டத்தில் மலசலகூடத்திற்கான குழியை வெட்டுவதற்குப் பயன்படும் கொங்கிரீட் குழாய்களை பாடசாலை வளாகத்தில் இறக்கி வைத்துள்ளனர். இதன்போது சில மாணவர்கள் குறித்த கொங்கிரீட் குழாய்கள் மீது ஏறி விளையாடியபோது குழாய் ஒன்று மாணவர் ஒருவர் மீது சரிந்து விழுந்ததில் மாணவர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இதையடுத்து அந்த மாணவர் பாடசாலை ஆசிரியர்களால் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோது அவர் இடைநடுவில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது குறித்த மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
The post கொங்கிரீட் குழாய் சரிந்து விழுந்து மாணவன் சாவு..! – தமிழ் பாடசாலையொன்றில் நடந்த துயரம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース