மதுபோதையில் வந்த கணவனுக்கு மரண தண்டனை வழங்கிய மனைவி – இலங்கையில் கொடூரம்
7 view
மாத்தறை வெலிகம பிரதேசத்தில் மதுபோதையில் வீட்டிற்கு வந்த கணவர், தனது மனைவியால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது. 42 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தையே இச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். மாத்தறை, வெலிகம, கொஸ்கஹஹேன பிரதேசத்தில் வசிக்கும் இவர், நேற்றுமுன்தினம் இரவு மது போதையில் தனது வீட்டிற்கு வந்துள்ளார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர், அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவியை தாக்கியதால் வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந் நிலையில் இவர் நேற்றுமுன்தினம் இரவு குடிபோதையில் வந்து மனைவியை தாக்க முயன்றார். இதன்போது மனைவி அயலவர்கள் சிலருடன் இணைந்து சேர்ந்து வீட்டின் முன் உள்ள மின்கம்பத்தில் கணவனை கட்டிப்போட்டுள்ளார். பின்னர், அவரது மனைவி உள்ளிட்டவர்கள் அவரைத் தாக்கியுள்ளனர். தாக்குதலில் மயக்கமடைந்த அவர், வெலிகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. கட்டப்பட்ட கயிற்றில் கழுத்து இறுகி இந்த மரணம் ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். சம்பவம் தொடர்பில் உயிரிழந்தவரின் மனைவியை…
The post மதுபோதையில் வந்த கணவனுக்கு மரண தண்டனை வழங்கிய மனைவி – இலங்கையில் கொடூரம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மதுபோதையில் வந்த கணவனுக்கு மரண தண்டனை வழங்கிய மனைவி – இலங்கையில் கொடூரம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
