சற்று முன் இலங்கையை வந்தடைந்த முருகன், ரொபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார்
20 view
புதிய இணைப்புஇந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முருகன், ரொபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் தற்போது இலங்கையை வந்தடைந்துள்ளனர். இவர்கள் மூவரும் இன்று(03) இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளதாக தமிழக சட்டத்தரணி புகழேந்தி பாண்டியன் தெரிவித்திருந்தார். குறித்த மூவரும், திருச்சி சிறப்பு முகாமிலிருந்து நேற்று இரவு 11.15 மணிக்கு சென்னைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இதன்படி சென்னை விமான நிலையத்திலிருந்து இலங்கை நோக்கி பயணித்த இவர்கள் மூவரும் தற்போது 11.30 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். மேலும் அவர்களுக்கு இலங்கைக்கு செல்வதற்கு மாத்திரமே இந்தியாவிலுள்ள இலங்கை துணை உயர்ஸ்தானிகரகம் கடவுச்சீட்டு வழங்கியுள்ளதாகவும் சட்டத்தரணி புகழேந்தி பாண்டியன் தெரிவித்திருந்தார். முதலாம் இணைப்புஇந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி(Rajiv Gandhi) கொலை வழக்கிலிருந்து விடுதலையான முருகன், ரொபர்ட் பயஸ் மற்றும் ஜெயகுமார் ஆகியோர் இன்று நாட்டுக்கு அழைத்துவரப்படவுள்ளதுடன் அவர்களுக்கு ஒருவழி கடவுச்சீட்டு (Passport)மாத்திரம் வழங்கப்பட்டுள்ளமை ஏமாற்றம்…
The post சற்று முன் இலங்கையை வந்தடைந்த முருகன், ரொபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சற்று முன் இலங்கையை வந்தடைந்த முருகன், ரொபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
