13 ஆவது திருத்தம் உரிய முறையில் அமுல்படுத்த வேண்டும்…! சிறிரங்கேஸ்வரன் வலியுறுத்து…!
12 view
பாலஸ்தீன விவகாரத்தில் தென்னாபிரிக்கா சர்வதேச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பு எவ்வாறு அமைந்திருந்தது என்பதை எமது இனப்பிரச்சினை தொடர்பில் சர்வதேசம் தீர்வைத் தரும் என மக்களை ஏமாற்றுகின்ற சக்திகள் தெரிந்துகொள்ள வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் ஐயாத்துரை சிறிரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்று(02) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையை பொறுத்தளவில் இந்த ஆண்டு தேர்தல் ஆண்டாக கூறப்படுகின்ற நிலையில் மார்ச் 12 இயக்கம் இலங்கை எதிர்கொள்ளவுள்ள தேர்தல்களில் போட்டியிடவுள்ள அரசியல்வாதிகள் தேசிய இனப்பிரச்சினைக்கு முழுமையான நிரந்தர தீர்வைகாணவேண்டும் என வலியுறுத்தியுள்ளது. குறிப்பாக 13 ஆவது திருத்தத்தையாவது உரிய முறையில் அமுல்ப்படுத்த வேண்டும் எனவும் மார்ச் 12 இயக்கத்தின் மாநாட்டில் பேராசிரியர் அர்ஜீன பாராக்கிரம வலியுறுத்தியுள்ளார். இதனை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினராகிய நாம் வரவேற்கின்றோம்.…
The post 13 ஆவது திருத்தம் உரிய முறையில் அமுல்படுத்த வேண்டும்…! சிறிரங்கேஸ்வரன் வலியுறுத்து…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 13 ஆவது திருத்தம் உரிய முறையில் அமுல்படுத்த வேண்டும்…! சிறிரங்கேஸ்வரன் வலியுறுத்து…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
