புத்தளத்தில் பெருந்தொகையான பீடி இலைகள் மீட்பு..!samugammedia
13 view
பாலாவி – மாம்புரி கடற்பிரதேசத்தில் மறைத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் ஒருதொகை பீடி இலைகள் கடற்படையினரால் இன்று அதிகாலை (2) கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த பீடி இலைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்த்தாக தெரிவிக்கப்படும் சொகுசு லொறியொன்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. வடமேற்கு கடற்படை கட்டளையின் தம்பபண்ணி கடற்படையினரால் குறித்த கடற்பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட விஷேட தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த பீடி இலைகள் கைப்பற்றுள்ளன. மாம்புரி கடற்பிரதேசத்தில் சந்தேகத்திடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு லொறி ஒன்றினை கடற்படையினர் சோதனை செய்துள்ளனர். இதன்போது, 16 உர மூடைகளில் அடைக்கப்பட்ட 470 கிலோ கிராம் பீடி இலைகள் இருந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.இலங்கையின் பல்வேறு பகுதிகளுக்கும் விநியோகிக்கும் நோக்கில் குறித்த பீடி இலைகள், கடல்மார்க்கமாக கொண்டுவரப்பட்டிருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாக கடற்படையினர் குறிப்பிட்டனர். இவ்வாறு கடற்படையினரால், கைப்பற்றப்பட்ட 470 கிலோ கிராம் பீடி இலைகள் மற்றும் சொகுசு லொறி என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் தலைமையக பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் கடற்படையினர் மேலும் தெரிவித்துள்ளனர். எனினும்…
The post புத்தளத்தில் பெருந்தொகையான பீடி இலைகள் மீட்பு..!samugammedia appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புத்தளத்தில் பெருந்தொகையான பீடி இலைகள் மீட்பு..!samugammedia appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
