யாழில் கார்த்திகைப் பூவால் வெடித்த சர்ச்சை..!பொலிஸாருக்கு எதிராக மனித உரிமை ஆணைகுழுவில் முறைப்பாடு…!
14 view
பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை அச்சுறுத்துவதும் விசாரணைக்கு உட்படுத்துவதும் மனித உரிமை மீறல் என குறிப்பிட்டு மனித உரிமை ஆணைக் குழுவில் இலங்கை ஆசிரியர் சங்கம் முறைப்பாடு செய்துள்ளது. அதேவேளை பொலிஸாரின் இத்தகைய செயற்பாடுகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. மனித உரிமை ஆணைக் குழுவின் யாழ் பிராந்திய அலுவலகத்தில் இலங்கை ஆசிரியர் சங்கத்தினரால் இன்றையதினம்(02) காலை இந்த முறைப்பாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த வாரம் நடைபெற்ற யாழ்ப்பாணம் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் இல்ல மெய்வல்லுனர் போட்டியின் இல்ல அலங்காரங்களில் மாணவர்களின் வெளிப்பாடுகள் தொடர்பாக தெல்லிப்பழை பிரிவு பொலிஸார் மாணவர்களையும் ஆசிரியர்களையும் விசாரணைக்கு அழைத்தமையும் விசாரணைக்கு உட்படுத்தியமையும் அடிப்படை மனித உரிமைகளை மீறுகின்ற நடவடிக்கையாகும். இலங்கை அரசியலமைப்பின் சட்ட வரையறைக்குட்பட்டு கருத்தியல் ரீதியாகவும் கலை ரீதியாகவும் குறியீட்டு வடிவங்கள் மூலமாகவும் பாடசாலை மட்ட இல்ல விளையாட்டு போட்டி அலங்காரங்களில் மாணவர்களின்…
The post யாழில் கார்த்திகைப் பூவால் வெடித்த சர்ச்சை..!பொலிஸாருக்கு எதிராக மனித உரிமை ஆணைகுழுவில் முறைப்பாடு…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் கார்த்திகைப் பூவால் வெடித்த சர்ச்சை..!பொலிஸாருக்கு எதிராக மனித உரிமை ஆணைகுழுவில் முறைப்பாடு…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
