அரசியல் நோக்கத்துக்காக பாதுகாக்கப்படும் உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி! எதிர்க்கட்சி பகிரங்கம்
26 view
உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல் நடத்தப்பட்ட தினத்தன்று குண்டு தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் அடங்கிய வாகனம் களனிகம வீதி சோதனை சாவடியில் வைத்து பரிசோதனை செய்யாமல் விடுவிக்கப்பட்டதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல் அரசியல் தேவைக்காகவே நடத்தப்பட்டது என்பதற்கு பல விடயங்களை குறிப்பிடலாம். தற்கொலை குண்டுதாரியான ஜமீலின் வீட்டுக்கு சி.ஐ.டி.யினர் சென்றமை, மாத்தறை பொடி சஹ்ரான், சொனிக், சொனிக் என்ற சொல், அபூபக்கர், குண்டுத்தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் அடங்கிய வாகனம் களனிகம வீதி சோதனை சாவடியில் வைத்து பரிசோதனை செய்யாமல் விடுவிக்கப்பட்டமை. அத்துடன் குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் சர்வதேச மட்டத்தில் தகவல் கிடைத்ததாக பிரதி பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜயவர்தன குறிப்பிட்டுள்ளமை உள்ளிட்ட பல காரணிகள் சந்தேகத்தை தோற்றுவித்துள்ளன. உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல் சம்பவத்தால் 269 இற்கும் மேற்பட்டோர்…
The post அரசியல் நோக்கத்துக்காக பாதுகாக்கப்படும் உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி! எதிர்க்கட்சி பகிரங்கம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அரசியல் நோக்கத்துக்காக பாதுகாக்கப்படும் உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி! எதிர்க்கட்சி பகிரங்கம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
