வயிற்றில் மண் மூட்டை, கை, கால்கள் கட்டப்பட்டு கடலில் வீசப்பட்ட குடும்பஸ்தரின் உடல்..! திருமலையில் கொடூரம்
43 view
திருகோணமலை – மூதூர் – பஹ்ரியா நகர் கலப்புக் கடற்கரையில் சந்தேகத்திற்கிடமான முறையில் இன்று முற்பகல் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான அப்துல் ஹமீது நப்ரீஸ் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவரின் கை, கால்கள் கயிறுகளால் கட்டப்பட்டு வைற்றில் மண் மூட்டையும் கட்டப்பட்டுள்ளது. இதனால் கொலை செய்யப்பட்டு கடலில் வீசப்பட்டிருக்கலாமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இதனையடுத்து மூதூர் நீதிவான் நீதிமன்ற நீதிபதி தஸ்னீம் பௌசான் குறித்த இடத்திற்கு வருகை தந்து சடலத்தை பார்வையிட்டு, விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
The post வயிற்றில் மண் மூட்டை, கை, கால்கள் கட்டப்பட்டு கடலில் வீசப்பட்ட குடும்பஸ்தரின் உடல்..! திருமலையில் கொடூரம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வயிற்றில் மண் மூட்டை, கை, கால்கள் கட்டப்பட்டு கடலில் வீசப்பட்ட குடும்பஸ்தரின் உடல்..! திருமலையில் கொடூரம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
