மசாஜ் நிலையத்திற்கு சேவை பெறச் சென்றவர் திடீர் மரணம்..!
15 view
தெஹிவளை – மஹரகம பிரதான வீதியில் அம்பில்லவத்தை சந்திக்கு அருகில் உள்ள மசாஜ் நிலையமொன்றில் சேவை பெறச் சென்ற ஒருவர் உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. திடீர் சுகவீனம் காரணமாக மசாஜ் நிலையத்திலேயே அவர் உயிரிழந்துள்ளதாக பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்தனர். பன்னிபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மாரடைப்பு காரணமாக குறித்த நபர் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
The post மசாஜ் நிலையத்திற்கு சேவை பெறச் சென்றவர் திடீர் மரணம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மசாஜ் நிலையத்திற்கு சேவை பெறச் சென்றவர் திடீர் மரணம்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
