25 அடி உயரமான சுவாமி விவேகானந்தரின் திருவுருவச் சிலை திறந்து வைப்பு!

10 view
மட்டக்களப்பு கல்லடி பாலத்துக்கருகில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 25 அடி உயரமான சுவாமி விவேகானந்தரின் திருவுருவச் சிலை இன்று திறந்து வைக்கப்பட்டது. மட்டக்களப்பு இராமகிருஷனமிஷனின் நூற்றாண்டின் தொடக்க விழாவினை சிறப்பிக்கும் முகமாக குறித்த சிலை அமைக்கப்பட்டுள்ளது. குறித்த சிலையை இராமகிருஷனமிஷன் இலங்கைக் கிளையின் தலைவர் ஸ்ரீமத் சுவாமி அக்ஷராத்மானந்தஜீ மஹராஜ் சம்பீராய பூர்வமாக திறந்து வைத்தார். 25 அடி உயரமான சுவாமி விவேகானந்தரின் திருவுருவச் சிலை திரைநீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து, சுவாமி விபுலாநந்தர் மணிமண்டலத்தின் பொது விழாவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக ராமகிருஷ்ண மிஷன் இலங்கைக் கிளையின் தலைவர் ஸ்ரீமத் சுவாமி அக்ஷராத்மானந்தஜீ மஹராஜ், அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர்களான கே. கருணாகரம், இரா.சாணக்கியன், முன்னாள் மாவட்ட அரசாங்க அதிபர்களான கே.கருணாகரன், முன்னாள் மாவட்ட அரசாங்க அதிபர்கள், கல்வி திணைக்கள அதிகாரிகள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்துக்கொண்டிருந்தனர்.
The post 25 அடி உயரமான சுவாமி விவேகானந்தரின் திருவுருவச் சிலை திறந்து வைப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース