மன்னார் மாவட்டத்தில் பலத்த பாகாப்புக்கு மத்தியில் ஈஸ்டர் நள்ளிரவு திருப்பலி
11 view
இயேசுவின் உயிர்ப்பு பெருவிழா நள்ளிரவுத் திருப்பலி (ஈஸ்டர்) மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் நேற்றிரவு 11.15 மணிக்கு இடம்பெற்றிருந்தது. மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் குருக்கள் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத் திருப்பலியாக ஒப்புக்கொடுத்தனர். திருவிழா திருப்பலி இடம்பெற்றபோது ஆலயத்தை சூழ பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டிருந்தது. அத்தோடு, மன்னார் மறை மாவட்டத்திலுள்ள பல்வேறு தேவாலயங்களிலும் நள்ளிரவு திருப்பலி இடம்பெற்ற நிலையில், குறித்த பகுதிகளிலும் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். அதனை தொடர்ந்து, இன்று (31) காலையும் திருவிழா திருப்பலி பல தேவாலயங்களில் ஒப்புக்கொடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
The post மன்னார் மாவட்டத்தில் பலத்த பாகாப்புக்கு மத்தியில் ஈஸ்டர் நள்ளிரவு திருப்பலி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மன்னார் மாவட்டத்தில் பலத்த பாகாப்புக்கு மத்தியில் ஈஸ்டர் நள்ளிரவு திருப்பலி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
