வீட்டு காணிக்குள் பைப்லைன் செய்து சாராய விநியோகம்- ஒருவர் கைது..!!
34 view
முள்ளியவளையில் வீட்டு காணி ஒன்றில் பைப்லைன் மூலமாக சட்டவிரோத கசிப்பு உற்பத்தி செய்து சாராய விநியோகத்தில் ஈடுபட்ட குடும்பஸ்தர் பொலிஸாரால் கைது செய்யட்டுள்ளார். நேற்று இடம்பெற்ற குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாமூலை நீலகண்டபுரம் கிராமத்தில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனை இடம்பெற்று வருவதாக முள்ளியவளை பொலிசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த பகுதியில் தேடுதல் நடத்தப்பட்டுள்ளது . வீட்டின் உரிமையாளர் ஒருவர் அவரது காணிக்குள் நீர் பொருத்தும் பைப்லைன் செய்த மாதிரி கோடா உற்பத்தி செய்து சட்டவிரோத கசிப்பு காச்சி விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளது. குறித்த வீட்டிற்குள் சென்ற பொலிசார் அங்கு நிலத்தில் புதைக்கப்பட்ட சட்டவிரோத மதுபானமான கோடாவினை அதன் மேல் பைப்லைன் செய்து வைத்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளதுடன் இரு பெரல் கோடா இதன் போது மீட்கப்பட்டுள்ளதுடன் வீட்டின் உரிமையாளரை கைது செய்து முள்ளியவளை பொலிசார் மீட்கப்பட்ட சான்று பொருட்களையும்…
The post வீட்டு காணிக்குள் பைப்லைன் செய்து சாராய விநியோகம்- ஒருவர் கைது..!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வீட்டு காணிக்குள் பைப்லைன் செய்து சாராய விநியோகம்- ஒருவர் கைது..!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
