6வது நாளாகவும் தொடரும் கல்முனை மக்களின் உரிமை போராட்டம் : மெழுகுவர்த்தி ஏந்திய உரிமை கரங்களுக்கு தீர்வு கிடைக்குமா?
12 view
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினுடைய உரிமைக்கான மக்கள் போராட்டம் 5வது நாளாக மெழுகுவர்த்தி ஏற்றி உரிமை கோஷம் எழுப்பிய போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். நேற்று மாலை குறித்த போராட்டத்தில் அதிகளவான மக்கள் கலந்து கொண்டிருந்ததுடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் மற்றும் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் ஆகியோரும் கலந்து கொண்டனர் . இப் போராட்டம் வழமைக்கு மாறாக தீச்சுடர் ஏந்திய ஓர் போராட்டமாக மக்கள் எழுச்சியுடன் இடம்பெற்றமை சுட்டிக்காட்டத்தக்கது. இந்நிலையில் ,கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரத்தில் இனங்களுக்கிடையே குரோதங்களை உருவாக்கி தங்களது அரசியலை நடத்தி செல்ல முற்படக் கூடாது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்தார். நேற்று போராட்டத்தில் கலந்து கொண்டு ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
The post 6வது நாளாகவும் தொடரும் கல்முனை மக்களின் உரிமை போராட்டம் : மெழுகுவர்த்தி ஏந்திய உரிமை கரங்களுக்கு தீர்வு கிடைக்குமா? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 6வது நாளாகவும் தொடரும் கல்முனை மக்களின் உரிமை போராட்டம் : மெழுகுவர்த்தி ஏந்திய உரிமை கரங்களுக்கு தீர்வு கிடைக்குமா? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
