மயிலிட்டியில் தரித்து நிற்கும் இழுவை படகுகளுக் தீர்வு : டக்ளஸ் விதித்த அதிரடி உத்தரவு
14 view
மயிலிட்டி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இழுவைப் படகுகளால் துறைமுகத்தில் கடற்றொழிலாளர்கள் படகுகளை கரைசேர்ப்பது மற்றும் எரிபொருள் நிரப்புவது போன்ற செயற்பாடுகள் பாதிக்கப்பட்டு வருவதாகவும் அதற்கு நிரந்தர தீர்வை பெற்றுத்தருமாறும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் அப்பகுதி கடற்றொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலிட்டி துறைமுக பகுதிக்கு இன்றையதினம் சனிக்கிழமை கள விஜயம் மேற்கொண்ட அமைச்சர்டக்ளஸ் தேவானந்தா கடற்தொழிலாளர்களிடம் நிலைமைகளை கேட்டறிந்து கொண்டார். அதன் போது. மயிலிட்டி இறங்குதுறை பகுதியில் அதிகளவான நீண்டநாள் தொழில் மேற்கொள்ளும் மீன்பிடி படகுகள் தரித்து நிற்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அந்த படகுகளால் நாளாந்தம் தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் படகுகள் எரிபொருள் நிரப்புவதிலும் படகுககளை கரை சேர்ப்பதிலும் பல அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றன இவ்வாறான பிரச்சினைகள் தொடர்ந்து வருவதால் அவற்றை ஒழுங்குபடுத்தி கடற்றொழில் நடவடிக்கைகளுக்கு இறங்குதுறையின் செயற்பாடுகளை இலகுபடுத்தி தருமாறு கடற்றொழிலாளர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன் மயிலிட்டி துறைமுகத்தில் கடற்படையினரால் பிடிக்கப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இந்திய இழுவைப் படகுகளாலும்…
The post மயிலிட்டியில் தரித்து நிற்கும் இழுவை படகுகளுக் தீர்வு : டக்ளஸ் விதித்த அதிரடி உத்தரவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மயிலிட்டியில் தரித்து நிற்கும் இழுவை படகுகளுக் தீர்வு : டக்ளஸ் விதித்த அதிரடி உத்தரவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
