மயிலிட்டி துறைமுகத்திற்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் திடீர் விஜயம்…!
12 view
மயிலிட்டி துறைமுகத்தில் கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வை பெற்றுத்தருமாறு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் குறித்த பகுதி கடற்றொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மயிலிட்டி துறைமுகத்தில் தொடர்ந்துவரும் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டிருந்த நிலையில் இன்றையதினம்(30) மயிலிட்டி இறங்குதுறைப் பகுதிக்கு கள விஜயம் மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அங்குள்ள நிலைமைகளை ஆராய்ந்தார். மேலும், மயிலிட்டி இறங்குதுறை பகுதியில் அதிகளவான நீண்டநாள் தொழில் மேற்கொள்ளும் ரோலர் படகுகளும், மீன்பிடி படகுகளும் தரித்து நிற்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அவை நாளாந்தம் தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் படகுகள் எரிபொருள் நிரப்புவதிலும் படகுககளை கரை சேர்ப்பதிலும் பல அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாகவும் கடற்றொழில் அமைச்சரிடம் சுட்டிக்காட்டப்பட்டது. அதேவேளை, இவ்வாறான பிரச்சினைகள் தொடர்ந்து வருவதால் அவற்றை ஒழுங்கபடுத்தி கடற்றொழில் நடவடிக்கைகளுக்கு இறங்குதுறையின் செயற்பாடுகளை இலகுபடுத்தி தருமாறு கடற்றொழிலாளர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன், மயிலிட்டி துறைமுகத்தில் சட்டவிரோதமாக…
The post மயிலிட்டி துறைமுகத்திற்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் திடீர் விஜயம்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மயிலிட்டி துறைமுகத்திற்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் திடீர் விஜயம்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
