தென்னை மரத்தில் ஏறிய நபர் தவறி விழுந்து உயிரிழப்பு..! தமிழர் பகுதியில் பரிதாபம்…!
8 view
தென்னை மரத்திலிருந்து தவறி கீழே வீழ்ந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, புதுக்குடியிருப்பைச் சேர்ந்த குறித்த நபர் கடந்த 24 ஆம் திகதி வல்லிபுரம் பகுதியில் தேங்காய் பிடுங்கச் சென்றுள்ளார். அங்கு தென்னை மரத்தின் காய்ந்த ஓலையொன்றைப் பிடித்தபோது தென்னை மரத்திலிருந்து தவறி கீழே வீழ்ந்துள்ளார். இந்நிலையில் குறித்த நபரை முதற்கட்ட சிகிச்சைக்குப் பின்னர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவம்னையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். இச் சம்பவத்தில் 61 வயதுடைய பிலிப்பையா ஜோய் பீரிஸ் என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார். இவரது இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது
The post தென்னை மரத்தில் ஏறிய நபர் தவறி விழுந்து உயிரிழப்பு..! தமிழர் பகுதியில் பரிதாபம்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தென்னை மரத்தில் ஏறிய நபர் தவறி விழுந்து உயிரிழப்பு..! தமிழர் பகுதியில் பரிதாபம்…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
