இந்தியா சென்றுள்ள சாகல ரத்நாயக்க; கண்டுகொள்ளப்படாத மீனவர்களது பிரச்சினை – எம்.வி.சுப்பிரமணியம் கவலை
9 view
இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி பணிக்குழாமின் பிரதிநிதி சாகல ரத்நாயக்க மீனவர்களது பிரச்சினையைப் பற்றி எந்தவித அக்கறையும் செலுத்தவில்லை என அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் எம்.வி.சுப்ரமணியம் கவலை வெளியிட்டுள்ளார். இன்றையதினம் அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். அங்கு அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், தமிழ்நாட்டில் காரைக்கால் பட்டினத்திலே இருக்கின்ற மீனவர்கள், இலங்கையில் சிறைபிடிக்கப்பட்டு உள்ள தமது மீனவர்களை விடுதலை செய்யுமாறு கோரி போராட்டத்தினை செய்து கொண்டிருக்கின்றார்கள். விடுதலை செய்யாவிட்டால் மக்களவைத் தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக ஒரு அறைகூவல் விடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். இந்தியா மீனவர்கள் மனிதாபிமான ரீதியில் சிந்திக்க வேண்டும். நீங்கள் இங்கே வந்து செய்கின்ற தொழிலானது தடை செய்யப்பட்ட ஒரு தொழில்முறையென அனைவருக்கும் தெரியும். அதையும் மீறி அடாவடித்தனமாக வந்து எமது வளங்களையும் அழித்து, வாழ்வாதாரத்தை சூறையாடி சென்று எமது வயிற்றில் அடிக்கின்றீர்கள், நமது தொழில் முதல்களை அழித்து…
The post இந்தியா சென்றுள்ள சாகல ரத்நாயக்க; கண்டுகொள்ளப்படாத மீனவர்களது பிரச்சினை – எம்.வி.சுப்பிரமணியம் கவலை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இந்தியா சென்றுள்ள சாகல ரத்நாயக்க; கண்டுகொள்ளப்படாத மீனவர்களது பிரச்சினை – எம்.வி.சுப்பிரமணியம் கவலை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
