ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வு…! கனகராஜ் தெரிவிப்பு…!
16 view
நோர்வூட் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஊழியர் சேமலாப நிதியம் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டப்பட்டுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பிரதி தலைவர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நோர்வூட் ஆடை தொழிற்சாலை மூடப்பட்டுள்ளதால் நிர்க்கதியாக இருக்கும் தொழிற்சாலை ஊழியர்கள் தமது பிரச்சனைக்கு தீர்வை பெற்று தருமாறு அமைச்சர் ஜீவன் தொண்டமானிடம் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், இது தொடர்பில் பிரச்சனையை ஆராய்ந்து தீர்க்குமாறு அமைச்சர் ஜீவன் தொண்டமானின் பணிப்புரைக்கமைய கடந்த நான்கு மாதங்களாக நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த நிலையில், இன்று நோர்வூட் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் ஊதிய பிரச்சனை தீர்த்து வைக்கப்பட்டுள்ளது. இன்று(28) நடைபெற்ற கலந்துரையாடலில் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் சார்பில் பிரதி தலைவருடன் காங்கிரசின் தொழிற்சங்க தேசிய அமைப்பாளர் லோகதாஸ் மற்றும் நோர்வுட்பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் ரவி குழந்தைவேல் ஆகியோரும் கலந்து கொண்டனர். ஹட்டன் உதவி தொழில் ஆணையாளர் திணைக்களத்தில் உதவி தொழில் ஆணையாளர்…
The post ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வு…! கனகராஜ் தெரிவிப்பு…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வு…! கனகராஜ் தெரிவிப்பு…! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
