இலங்கையில் பிற்பகல் 2.00 மணிக்கு பின் பலத்த மழை..!- மக்களுக்கு அவசர எச்சரிக்கை
12 view
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய மேல், தென், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. அதேநேரம் கிழக்கு மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. மேலும் மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது.
The post இலங்கையில் பிற்பகல் 2.00 மணிக்கு பின் பலத்த மழை..!- மக்களுக்கு அவசர எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கையில் பிற்பகல் 2.00 மணிக்கு பின் பலத்த மழை..!- மக்களுக்கு அவசர எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
