யாழில், ரணில் அரசு மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைச்சம்பவங்களுக்கு எதிரான கண்டனங்கள்!!
21 view
கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தேசிய தைப்பொங்கல் தினத்தினை கொண்டாடும் முகமாக யாழிற்கு வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்கிரசிங்கவிற்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள்,மதத்தலைவர்கள்,பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்து முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு போராட்டத்தின் போது சிறிலங்கா பொலிஸாரினாலும், விசேட அதிரடி படையினராலும், இராணுவத்தினராலும் மேற்கொள்ளப்பட்ட கண்மூடித்தனமான தாக்குதல்களுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். அந்தவகையில் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள்,சிவில் அமைப்புக்கள்,மதத்தலைவர்கள் இணைந்து வெயிட்ட கண்டன அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது ; பெண்கள், சிறுவர்கள், மதத்தலைவர்கள் மற்றும் மாணவர்கள் மீதான சிறிலங்கா ஆயுத படையினரின் வன்முறை தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கின்றோம். தமிழர் தாயகப் பகுதியான யாழ்ப்பாணத்தில், தேசிய பொங்கல் எனும் பெயரில் சிறிலங்காவின் ஜனாதிபதி ரணில் தமிழர் திருநாளாம் பொங்கல் தினத்தில் (15.01.2023) சர்வதேசத்திற்கும், சிங்கள மக்களுக்கும் அரங்கேற்றப்பட்ட நாடகத்தை தோலுரித்துக்காட்டும் விதமாக யாழ் பல்கலைகழக மாணவர்களால் ஒழுங்கு செய்யப்பட்ட அமைதிவழி பேரணியில் கலந்துகொண்ட வயோதிபத்தாய்மார்கள், சிறுவர்கள், பெண்கள், மதத்தலைவர்கள் மற்றும் மாணவர்கள் மீது சிறிலங்கா…
The post யாழில், ரணில் அரசு மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைச்சம்பவங்களுக்கு எதிரான கண்டனங்கள்!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில், ரணில் அரசு மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைச்சம்பவங்களுக்கு எதிரான கண்டனங்கள்!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
