ரணில் ஐயா உங்களுடைய ஆயுள் காலம் இன்னும் இரு மாதங்கள் மட்டுமே..! ஜே.வி.பி சூளுரை
21 view
சுதந்திரமடைந்து 75 வருடங்களாகும் நிலையில் ஒவ்வொரு ஆட்சியாளர்களும் தமிழ் மக்களுடைய பிரச்சினையைத் தீர்க்கின்றேன் என்று ஆட்சிப்பீடம் ஏறியிருக்கின்றீர்கள். நீங்கள் அனைவருமே தமிழ் மக்களுடைய தன்மானத்தை குழிதோண்டிப் புதைக்கின்றவர்களாகவே செயற்பட்டிருக்கின்றீர்கள். அதிலும் விசேடமாக ரணில் விக்கிரமசிங்கவின் ஜக்கிய தேசியக் கட்சியானது தமிழ் மக்களின் தன்மானத்தை குழிதோண்டிப் புதைக்கின்ற பல்வேறு கேடுகெட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது என மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன்தெரிவித்தார். யாழில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். தேர்தல் காலம் சூடுபிடித்துள்ள நிலையில் களத்திலே நரிகள், யானைகள் மற்றும் பூனைகள் எனப் பலர் புகுந்து விளையாடுகின்ற விளையாட்டுக்களை மக்களால் காண முடிகின்றது. அந்த வகையில், எமது நாட்டு மக்களுக்கு வஞ்சகத்தனம் செய்வதில் முன்னணி வகிக்கின்ற நாட்டின் ஜனாதிபதி அண்மையில் பொங்கல் விழா என்று கூறி யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்து யாழ்ப்பாண மக்களை மீண்டும் ஏமாற்றுகின்ற தனது சித்து விளையாட்டுக்களை காட்டியிருக்கின்றார். இந்த ரணில் விக்கிரமசிங்க…
The post ரணில் ஐயா உங்களுடைய ஆயுள் காலம் இன்னும் இரு மாதங்கள் மட்டுமே..! ஜே.வி.பி சூளுரை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ரணில் ஐயா உங்களுடைய ஆயுள் காலம் இன்னும் இரு மாதங்கள் மட்டுமே..! ஜே.வி.பி சூளுரை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
