திருமலையில், கட்டுப்பணம் செலுத்தியது முஸ்லீம் காங்கிரஸ்!!
21 view
திருகோணமலை மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவதற்கான கட்டுப்பணம் செலுத்தியது. எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவதற்காக 10 உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணம் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் தலைமையில் இன்று புதன்கிழமை மாலை செலுத்தப்பட்டது. இதன்போது முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான ஜே.எம். லாஹீர், கிண்ணியா நகர சபைத் தவிசாளர் எம். நிவாஸ், குச்சவெளிப் பிரதேச சபைத் தவிசாளர் முபாறக், கிண்ணியா பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் க. ஜவாதுள்ளா, தம்பலகாமம் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சுபியான் ஆகியோர் கலந்துகொண்டனர்.
The post திருமலையில், கட்டுப்பணம் செலுத்தியது முஸ்லீம் காங்கிரஸ்!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post திருமலையில், கட்டுப்பணம் செலுத்தியது முஸ்லீம் காங்கிரஸ்!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
