கொழும்பில் மருத்துவ பீட மாணவி கொலை தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்
21 view
கொழும்பு 7 இல் குதிரைப் பந்தயத் திடலில் 23 வயதுடைய யுவதியின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பல்கலைக்கழக மாணவர் வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளுக்காக கறுவாத்தோட்ட பொலிஸாரிடம் அழைத்து வரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது ஹோமாகம – கிரவத்துடுவ பகுதியைச் சேர்ந்த 24 வயதான யுவதி ஒருவரே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கொழும்பு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானப் பீடத்தில் இரண்டாம் வருடத்தில் கல்வி கற்கும் மாணவியே இவ்வாறு மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். கொழும்பு – குதிரை பந்தயத் திடலில் கழுத்தில் வெட்டு காயங்களுடன், இன்று பிற்பகல் 1.30 அளவில் இந்த யுவதியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. சடலத்திற்கு அருகிலிருந்து பையொன்றும், கையடக்கத் தொலைபேசி ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர். இந்த நிலையில், கையடக்கத் தொலைபேசி மற்றும் சீசீடிவி கமராக்களின் ஊடாக பொலிஸார் துரித விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக…
The post கொழும்பில் மருத்துவ பீட மாணவி கொலை தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கொழும்பில் மருத்துவ பீட மாணவி கொலை தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
