கூட்டமைப்பைத் தொடர்ந்து முன்னணிக்குள்ளும் பிளவு – வெளியேறிய முக்கிய தரப்பு
21 view
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிளவினைத் தொடர்ந்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தரப்பிற்குள்ளும் பிளவு உறுதியாகியுள்ளது. தமிழ்த் தேசிய அரசியலில் தமிழ்க் கட்சிகள் பிளவுபட்டு, தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமைத்தன்மை ஏமாற்றமளித்துள்ளமையால் தமிழர் சம உரிமை இயக்கம் கட்சி, அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பதற்கு முடிவு எடுத்துள்ளதாக அதன் பொதுச் செயலாளர் வலி.வடக்கு பிரதேச சபை உறுப்பினர் தா.நிகேதன் தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில், 2009 இற்கு பின்னரான கள யதார்த்த சூழலில் தமிழ்த் தேசிய அரசியலில் ஈடுபடும் தரப்புக்கள் தமிழ் மக்களின் அபிலாசைகளை குழிதோண்டிப் புதைக்க முற்பட்டிருக்கின்றார்கள். இவ்வாறான சூழ்நிலையிலேயே, கடந்த 2018 ஆம் வருட உள்ளுராட்சி தேர்தலில் தமிழர் சம உரிமை இயக்கம் மேலும் சில அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புக்களுடன் இணைந்து தமிழ்த் தேசியப் பேரவையாக வடக்கு கிழக்கு எங்கும் போட்டியிட்டது. தற்போது தமிழ்க் கட்சிகளிடம்…
The post கூட்டமைப்பைத் தொடர்ந்து முன்னணிக்குள்ளும் பிளவு – வெளியேறிய முக்கிய தரப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கூட்டமைப்பைத் தொடர்ந்து முன்னணிக்குள்ளும் பிளவு – வெளியேறிய முக்கிய தரப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
