தேர்தல் செலவீன சட்டமூலம் குறித்து உயர்நீதிமன்றத்தின் அறிவிப்பு
22 view
தேர்தல் செலவீன ஒழுங்குப்படுத்தலுக்கான சட்டமூல திருத்தம், அரசியலமைப்புக்கு அமைவானது என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (ஜன.17) சபாநாயகர் இதனை அறிவித்துள்ளார். இதன்படி, குறித்த சட்டமூலம், சாதாரண பெரும்பான்மையினால் நிறைவேற்ற முடியும் என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார். இன்றைய சபை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில், உயர்நீதிமன்றத்தில் முடிவை சபாநாயகர் அறிவித்தார்.
The post தேர்தல் செலவீன சட்டமூலம் குறித்து உயர்நீதிமன்றத்தின் அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தேர்தல் செலவீன சட்டமூலம் குறித்து உயர்நீதிமன்றத்தின் அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
