சிறுநீரக மோசடி..! கிராம உத்தியோகத்தர் இருவர் கைது
21 view
பொரளையில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் பாரியளவிலான சிறுநீரகக் கடத்தல் சம்பவம் தொடர்பில் மேலும் மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த மாதம் குறித்த வைத்தியசாலையில் சிறுநீரக கடத்தல் நடப்பதாக முறைப்பாட்டின் பின்னர் பலர் கைது செய்யப்பட்டனர். எனினும் நேற்றைய தினம் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் மேலும் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த மோசடியின் பிரதான தரகராக செயற்பட்ட கொழும்பு 13 பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய நபர் ஒருவர் நேற்று (16) பிற்பகல் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் அமர்வீதி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார். அத்துடன், கொலன்னாவ மற்றும் சிறி ஜயவர்தனபுர கோட்டே பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட இரண்டு கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை சேர்ந்த இரண்டு கிராம உத்தியோகத்தர்களும் நேற்று பிற்பகல் கைதுசெய்யப்பட்டனர். இருவருக்கு போலி சான்றிதழ் வழங்கி சிறுநீரக மோசடியாளர்களுக்கு உதவிய குற்றச்சாட்டில் இவர்கள் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.…
The post சிறுநீரக மோசடி..! கிராம உத்தியோகத்தர் இருவர் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சிறுநீரக மோசடி..! கிராம உத்தியோகத்தர் இருவர் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
