கம்பஹாவில் அனைத்து ஒசுசல மருந்தகங்களையும் ஒழுங்குபடுத்த அவசரத் திட்டம்- பிரசன்ன உத்தரவு!

21 view
கம்பஹா மாவட்டத்தில் உள்ள அனைத்து மருந்தகங்களையும் ஒழுங்குபடுத்த அவசரத் திட்டம் ஒன்றை தயாரிக்குமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க  நேற்று (16) மினுவாங்கொடை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவில் உள்ள அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். போதைக்கு அடிமையானவர்கள் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் சில மருந்தகங்களில் இருந்து பல வகையான மருந்துகளை வாங்குவதாக வைத்திய அதிகாரியும் பொலிஸாரும் தெரிவித்தமைக்கு  பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். கம்பஹா மாவட்டத்தில்  போதைப் பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் போதைக்கு அடிமையானவர்களை மீட்பதற்கான திட்டங்கள் ஏற்கனவே நடைமுறையில் உள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். மினுவாங்கொடை பிரதேச செயலகத்தில் நேற்று (16) நடைபெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அமைச்சர் அங்கு மேலும் கூறியதாவது, போதைப்பொருளில் இருந்து பாடசாலை மாணவர்களை காப்பாற்ற கம்பஹா மாவட்டத்தில் விசேட திட்டம் ஒன்று செயல்படுத்தப்படுகிறது. பொலீஸ், மருத்துவ அலுவலகங்கள், பாடசாலை பிரதேச…
The post கம்பஹாவில் அனைத்து ஒசுசல மருந்தகங்களையும் ஒழுங்குபடுத்த அவசரத் திட்டம்- பிரசன்ன உத்தரவு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース