துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் உயிரிழப்பு!
21 view
பேலியகொட – களுபாலம பகுதியிலுள்ள வீடு ஒன்றில் இன்று (செவ்வாய்கிழமை) காலை துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் உயிரிழந்துள்ளார். இன்று காலை 6.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே இந்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பின்னர், காயமடைந்த நபர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபர் கொலை வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு சில வாரங்களுக்கு முன்னர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
The post துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் உயிரிழப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் உயிரிழப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
