முட்டை இறக்குமதியில் இழுபறி நிலை; விநியோக நடவடிக்கைகள் பாதிப்பு!

31 view
முட்டை இறக்குமதி தொடர்பான சுகாதார பரிந்துரைகள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என அரச வணிக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அந்த நிலையில் எதிர்வரும் பண்டிகை காலங்களில் முட்டை விநியோக நடவடிக்கைகளுக்கு பாதிப்புக்கள் ஏற்படக்கூடும் என அதன் தலைவர் திரு.ஆசிறி வலிசுந்தர தெரிவித்தார். இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ள போதிலும், கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பரிந்துரை கிடைக்காமை காரணமாக அந்த நடவடிக்கை தாமதமடைந்துள்ளது. இந்தியாவில் பறவைக் காய்ச்சல் பரவி வருவதன் காரணமாக முட்டை இறக்குமதிக்கு அனுமதி வழங்க முடியாத நிலை காணப்படுவதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் பல்வேறு சந்தர்ப்பங்களில் தெரிவித்திருந்தது. இந்தியாவிலிருந்து முட்டை இறக்குமதி செய்யப்பட்டால் 40 ரூபா எனும் சில்லறை விலைக்கு விற்பனை செய்ய முடியும் என அரச வணிகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிரி வலிசுந்தர தெரிவித்தார். இதன்மூலம் தற்போது சந்தையில் காணப்படும் முட்டைப் பிரச்சினைக்கு உடனடி தீர்வு கிடைக்கும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
The post முட்டை இறக்குமதியில் இழுபறி நிலை; விநியோக நடவடிக்கைகள் பாதிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース